தமிழகத்தில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டு – எளிய வழிமுறைகள்!!

11
தமிழகத்தில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டு - எளிய வழிமுறைகள்!!
தமிழகத்தில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டு - எளிய வழிமுறைகள்!!
தமிழகத்தில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டு – எளிய வழிமுறைகள்!!

ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்களும், பயன்பாட்டில் இருக்கும் ரேஷன் அட்டைகளில் திருத்தங்களை செய்வதற்கும் எளிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 20 ரூபாய் கட்டணத்துடன் புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டு

ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் இந்தியா முழுவதும் ரேஷன் கார்டு திட்டம் துவங்கப்பட்டது. அதிலும் தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொங்கல் பரிசுகளை அளித்து வருகிறது தமிழக அரசு. அதன்படி இந்த ஆண்டும் ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்கள், ரேஷன் அட்டையில் இணைத்துள்ள கைபேசி எண்ணை வைத்து பொங்கல் பரிசுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

அதே சமயம் ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்கள் புதிய ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்வதில் பல குழப்பங்கள் இருந்து வந்தது. புதிய ரேஷன் அட்டைகளை பெற்று கொள்வதற்கு அதிக அளவில் பணத்தை செலவு செய்து ஏமாறியதாகவும் புகார்கள் இருந்து வந்தது. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு காணும் வகையில் 20 ரூபாய் செலவில் புதிய ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வௌவாலிலிருந்து பரவியது – மருத்துவ நிபுணர் குழு சான்று!!

அதன்படி புதிய ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள், ரேஷன் அட்டைகளில் ஏதாவது திருத்தம் செய்ய விரும்புபவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த இணையதள முகவரியில் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அந்த எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை பயன்படுத்தி புதிய ரேஷன் அட்டைக்கு பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையத்தில் தேவையான தகவல்களை பதிவு செய்த பின் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

11 COMMENTS

  1. விடு இருக்குறவங்க ரேஷன் கார்டு அப்ளை பண்ணலாம் விடு இல்லாதவர்கள் எப்படி ரேஷன் கார்டு வாங்கலாம் ஒரு ஐடியா சொல்லுங்க சார்

  2. சொந்த வீடு இல்லாதவர்கள் புது ரேசன் கார்டு பெற,வாடகை ஒப்பந்தம்,மற்றும் வீட்டுவரி ரசீது நகலுடன் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரம் தேவையெனில் 9080223442 (CSC) எண்ணை தொடர்பு கொள்ளவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!