தமிழக அரசு சார்பில் புதிய சூப்பர் திட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குறுவை நெல் சாகுபடி திட்டம்:
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். குறிப்பாக நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பயன் பெறும் வரையில் பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு!!
அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழக முதல்வர் 12.06.2021 அன்று மேட்டூர் ஆணையினை திறந்து வைத்ததை தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் உயர்மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முக்கிய இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில் ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்து ஆணையிட்டுள்ளார்கள்.
இந்த குறுவை சாகுபடி திட்டம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் மற்றும் கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலமாக 2,870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்புக்கு ரசாயன உரங்கள் ஆகியவை மானிய விலையில் விநியோகிக்கப்படும்.
TN Job “FB
Group” Join Now
நெல் விதைகள், உரங்கள், இடுபொருட்களின் மானியத்திற்கு ரூபாய் 50 கோடியும், வேளாண் இயந்திரங்கள் மானியத்திற்கு ரூபாய் 11.09 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3.5 லட்சம் ஏக்கர் என்ற இலக்கைவிட அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. இந்த குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் மூலம் 2,07,259 விவசாயிகள் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.