தமிழக பள்ளிகளில் புதிய திட்டம் – புதிய பயிற்சி அறிமுகம்!

0
தமிழக பள்ளிகளில் புதிய திட்டம் - புதிய பயிற்சி அறிமுகம்!
தமிழக பள்ளிகளில் புதிய திட்டம் - புதிய பயிற்சி அறிமுகம்!
தமிழக பள்ளிகளில் புதிய திட்டம் – புதிய பயிற்சி அறிமுகம்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம் மூலம் மாநகராட்சி உதவி கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் உள்பட 600 பேருக்கு பட்டறை மற்றும் பயிற்சி அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த திட்டம் குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதிய திட்டம்:

சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மாநகராட்சி பள்ளிகளுக்கான பள்ளி தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றம் (எஸ்எல்டிடி) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது சென்னை மாநகராட்சி. இதைத் தொடா்ந்து சென்னை பள்ளிகள் முழுமையான மாற்றத்தை அடைவதற்கு தேவையான தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் நடைபெறவுள்ளன.

Exams Daily Mobile App Download

இதில், மாநகராட்சி பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 600 உதவி கல்வி அலுவலா்கள் (ஏஇஒ), தலைமையாசிரியா்கள், உதவி தலைமையாசிரியா்கள் மற்றும் மூத்த ஆசிரியா்களை தோ்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் ஒரு நபருக்கு கருப்பொருள் குறித்து 2 நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மாதத்திற்கு மொத்தம் 10 நாட்களில் 5 கருப்பொருள் குறித்து வகுப்பு எடுக்கப்படும். இதில் இவர்களுக்குள் 20 குழுக்களாக பிரித்து குழுவுக்கு 30 பேருக்கு வகுப்பு எடுக்கப்பட உள்ளது. இந்த வகுப்பு 2 கட்டமாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் பயிற்சி வகுப்புகளும் 2ம் கட்டத்தில் செயல்முறை (practical) கற்பித்தலும் நடத்தப்பட உள்ளன.

மதுரையில் நாளை (ஜூலை 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு கருப்பொருளுக்கும் ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் ஒதுக்கப்படும். அப்படி ஒட்டு மொத்தமாக 5 மாதங்கள் என ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் 10 நாட்கள் வகுப்பறை பயிற்சி வகுப்புகள் நடக்கும். மேலும் செயல்முறை வகுப்பில் ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் மாதிரி பள்ளிகளுக்குச் சென்று, வெற்றிக்கான மற்றும் புகழத்தக்க செயல்களைப் பற்றி கேட்டறிந்து, அவர்களுடன் உரையாடி பயிற்சி பெற வேண்டும். அப்போது இந்த வகுப்பை மாநகராட்சி கல்வித்துறை ஆணையர் சினேகா, ஆணையர் ககன் தீப் சிங்பேடி ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here