தமிழக பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் – ஆயுத்த பணிகள் தீவிரம்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் - ஆயுத்த பணிகள் தீவிரம்!
தமிழக பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் - ஆயுத்த பணிகள் தீவிரம்!
தமிழக பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் – ஆயுத்த பணிகள் தீவிரம்!

தமிழக பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது தகைசால் பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சிறப்பு திட்டம்:

தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்வதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தன்னார்வலர்களை கொண்டு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 1 – 3ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை எழுத்து மற்றும் கணித அறிவினை அளிக்கும் பொருட்டு எண்ணும், எழுத்தும் திட்டம் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தகைய திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாணவர்களிடம் கற்றல் விளைவை ஏற்படுத்துவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

நீங்க இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணுவீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்… வந்துள்ள புதிய அப்டேட்!

இந்த நிலையில் அடுத்த திட்டமாக 28 அரசுப் பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 4 நாள் சுற்று பயணமாக அண்மையில் டெல்லி சென்றிருந்தார். அப்போது டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளை பார்வையிட்டு பள்ளியின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடமும், முதல்வரிடமும் கேட்டறிந்தார். பிறகு தமிழகம் வந்த அவர் டெல்லியில் செயல்பட்டு வரும் பள்ளிகள் போல தமிழகத்திலும் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்.

Exams Daily Mobile App Download

அதன்படி கடந்த மாதம் 5ம் தேதி டெல்லி மாதிரி பள்ளிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விழாவில் கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைத்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் 6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளை தகைசால் பள்ளிகளுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடையும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!