இந்தியாவில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

0
இந்தியாவில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு - எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு - எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவின் குடியுரிமை ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு

இந்தியாவில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதற்காக குடிமக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தற்போது 17 வயது நிரம்பியவர்களும் முன்கூட்டியே வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கலாம் 18 வயது ஆகும் வரை காத்திருக்க தேவையில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் எண்ணுடன் இந்த வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிருக்கான பிங்க் பேருந்துகளில் விளம்பரங்கள் – போக்குவரத்து துறை விளக்கம்!

இதற்கான பணிகள் கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்கி உள்ளது. இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் வாக்காளர்கள் இணைதளம் மற்றும் Voter Helpline App என்ற செயலி மூலமாக தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 6B படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கலாம். ஆதார் எண் இல்லாதவர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

இந்த பணியை அடுத்த ஆண்டு 2023 க்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருக்கும் இது போன்ற குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!