தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

0
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுப்பொருட்களை அந்ததந்த மாவட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதில் தற்போது சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அறிவித்துள்ள தேதிகளில் பரிசுத்தொகுப்பு கையில் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு பொங்கல் 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரேஷன் கடைகளில் ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

டிச.30 முதல் 4 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – சபரிமலை செல்வோருக்கு விலக்கு! மாநில அரசு அறிவிப்பு!

ஆனால் இந்த ஆண்டு ரொக்கப்பணம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் விடுத்திருந்த நிலையிலும் அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு ஜனவரி 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பரிசு தொகுப்பு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைப்பெற்று வருகிறது.

டிச.31 முதல் ஜன.14 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில கல்வித்துறை அறிவிப்பு!

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புகளை ஏற்றிச் செல்வதற்காக வந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் சுமைதூக்குவோர் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு கூடுதல் கூலி கேட்டுள்ளனர். அதை ஒப்பந்தம் எடுத்தவர்கள் தர மறுத்தால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பொங்கல் பரிசு பொருட்களை லாரியில் ஏற்ற மறுத்து விட்டனர். இதனால் காரைக்குடி தாலுகா ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுப்பொருள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!