தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிய பதவிகள் – அரசாணை வெளியீடு!

0
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிய பதவிகள் - அரசாணை வெளியீடு!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிய பதவிகள் - அரசாணை வெளியீடு!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிய பதவிகள் – அரசாணை வெளியீடு!

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் தான் நாளைய தமிழகத்தின் அடிப்படை என்று அரசு கூறி வருகிறது. அதனால்,தமிழக அரசு, பள்ளி கல்வித்துறைக்காக அதிக அளவில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

புதிய பதவிகள்:

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என்று அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும், தனியார் பள்ளி மாணவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக அதிக அளவில் அரசு பள்ளிகளை நோக்கி படை எடுத்து வருவதால், இதனை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அதிக நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடக்க கல்வித்துறைக்கு என்று தனியாக அலுவலர்களை நியமிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்னும் ஆறே மாதங்களில் பெண்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் – மாநில அரசு அதிரடி!

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு கல்வித் துறையின் நிர்வாக சீரமைப்புக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தனியார் பள்ளிகள் இயக்குநரகத்திற்கு தனி தனியாக 1 துணை இயக்குநர், புதிதாக 32 மாவட்டக் கல்வி அலுவலர், 15 வட்டாரக் கல்வி அலுவலர், 16 தனி உதவியாளர், 86 கண்காணிப்பாளர் போன்ற பதவிகளை உருவாக்க உள்ளது.

Exams Daily Mobile App Download

அதேபோல், மாநிலத்திட்ட இயக்குநரகத்தில் உள்ள 2 இணை இயக்குநர் பணியிடங்கள் எஸ்சிஇஆர்டி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு மாற்றி வழங்கப்பட உள்ளதாகவும், இந்த புதிய அமைப்புகளுக்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மாவட்ட வாரியாக,  தனியார் பள்ளிகள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்க தலா 1 மாவட்டக் கல்வி அதிகாரி நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!