சன் டிவி “பூவே உனக்காக” சீரியலில் பூவரசியாக நடிக்கப்போவது இவர் தான் – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவி
சன் டிவி "பூவே உனக்காக" சீரியலில் பூவரசியாக நடிக்கப்போவது இவர் தான் - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவி “பூவே உனக்காக” சீரியலில் பூவரசியாக நடிக்கப்போவது இவர் தான் – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பூவே உனக்காக” சீரியலில் பூவரசி கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது நடிகை வர்ஷினி களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பூவே உனக்காக:

சன் டிவி சீரியல்கள் என்றாலே அந்த காலம் முதல் தனி வரவேற்பு உண்டு. வார இறுதி நாட்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் வாரம் முழுவதும் ஒளிபரப்பாகி வரும் சீரியலை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பூவே உனக்காக” இந்த சீரியலில் பூவரசி கதாபாத்திரம் தான் கதாநாயகியாக இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் இதற்கு முன்னதாக நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக கதிரவன் என்ற கேரக்டரில் பிரபல சின்னத்திரை நடிகர் அசீம் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தாவுக்கு வாழ்க்கை தத்துவத்தை கற்று கொடுத்த குழந்தை – ரசிகர்கள் உற்சாகம்!

இதற்கு முன்னதாக கதிரவன் கதாபாத்திரத்தில் அருண் நடித்து வந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் சீரியலில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு ஜோடியாக நடித்த ராதிகா ப்ரீத்தியும் விலக இருக்கிறார். அதே போல் பூவே உனக்காக சீரியலில், பூவரசியின் தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதாவும் சீரியலில் விலகி இருக்கிறார். இந்நிலையில் அவர் சன் டிவி அருவி சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா முதல் ‘பிக் பாஸ்’ வனிதா விஜயகுமார் வரை – YouTube மூலம் பணத்தை அள்ளும் பிரபலங்கள்!

இந்நிலையில் தற்போது ராதிகா ப்ரீத்தி விலகலுக்கு பின் அவருக்கு பதிலாக யார் களமிறங்க இருக்கிறார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். தற்போது அது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பூவரசியாக சன் டிவி அக்னி நட்சத்திரம் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வர்ஷினி கமிட்டாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!