ஓய்வூதிய காலத்துக்கான புதிய பாலிசி – LIC அறிமுகம்!

0
ஓய்வூதிய காலத்துக்கான புதிய பாலிசி - LIC அறிமுகம்!
ஓய்வூதிய காலத்துக்கான புதிய பாலிசி - LIC அறிமுகம்!
ஓய்வூதிய காலத்துக்கான புதிய பாலிசி – LIC அறிமுகம்!

ஒருவரது முதுமைக்கு பிறகு பயன்படும் வகையில், ஓய்வூதிய காலத்துக்கான புதிய பாலிசிகளை LIC நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நியூ ஜீவன் சாந்தி பாலிசியில் முதலீடு செய்பவர்களுக்கு என பிரத்யேக சலுகைகள் காத்திருக்கிறது.

புதிய சலுகை

தற்போதுள்ள காலகட்டத்தில், எதிர்காலத்துக்கு என பாலிசிகளை சேமித்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்குள் வந்துள்ளோம். வழக்கமாக பணத்தை சேமித்து வைக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு, அந்த பணம் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மிக உதவியாக இருந்திருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பண சேமிப்பு அவசியம் என்ற ஒரு சிறந்த பாடத்தை கொரோனா பெருந்தொற்று கற்றுக்கொடுத்துள்ளது.

SBI வங்கி ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது? தவறாமல் படிங்க!

அந்த வகையில் பணம் சேமிக்க விரும்புபவர்களுக்கு முன்னணி காப்பீட்டு நிறுவனமான LIC ஓரு புதிய ஜீவன் சாந்தி பாலிசியை (New Jeevan Shanti Policy) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாலிசியின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால் அதில் கிடைக்கும் ஓய்வூதியம் தான். அதாவது இப்பாலிசியில் முதலீடு செய்தால், ஒருவர் அவரது வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தை உத்தரவாதத்துடன் பெறலாம். ஒற்றை பிரீமியம் கொண்ட இந்த ஜீவன் சாந்தி பாலிசியில் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு Options கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதலாவது Immediate Annuity மற்றும் அடுத்ததாக Deferred Annuity ஆகும். முதல் திட்டம், அதாவது Immediate Annuity ன் கீழ் பாலிசியை எடுத்தவுடன், உங்களுக்கு ஓய்வூதிய வசதி கிடைக்கும். ஆனால் Deferred Annuity ன் கீழ் பாலிசி எடுத்தால் 5, 10, 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஓய்வூதிய சலுகை கொடுக்கப்படும். ஒருவேளை நீங்கள் விரும்பினால் ஓய்வூதியத்தை சலுகையை உடனடியாக துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற அளவு நிர்ணயம் செய்யப்படவில்லை. தவிர முதலீடு, வயது மற்றும் ஒத்திவைப்பு காலத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அதாவது LIC ல் உங்கள் முதலீடுகளுக்கு ஏற்ப ஓய்வூதியம் கொடுக்கப்படும். இத்திட்டத்தை 30 ஆண்டுகள் முதல் 85 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ள முடியும். இது தவிர ஜீவன் சாந்தி திட்டத்தில் பென்ஷன் துவங்கி ஒரு வருடம் கழித்து லோன் எடுத்துக்கொள்ளலாம். அல்லது பென்ஷன் துவங்கிய 3 மாதங்களுக்குப் பிறகு சரணடைய முடியும். மேலே கொடுக்கப்பட்ட 2 திட்டங்களுக்கும் கீழ் பாலிசி எடுத்தால், ஆண்டு விகிதங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். இவற்றை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையிலும் பெற்று கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!