சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அணியில் இணையும் 2 புதிய வீரர்கள்!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அணியில் இணையும் 2 புதிய வீரர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அணியில் இணையும் 2 புதிய வீரர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அணியில் இணையும் 2 புதிய வீரர்கள்!

கடந்த 3 ஆட்டங்களில் எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பிளேயிங் XIல் 2 புதிய வீரர்கள் களமிறக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது யார் என்ற விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் ஆரம்பம் முதலே சொதப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் 26ம் தேதியன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸிடமும் கடடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடமும் வீழ்ந்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 3ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் CSK 54 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவி இருந்தது. இந்த ஆட்டத்தில் பவர் பிளேயில் மட்டும் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது CSK அணி.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – HRA மூலம் மீண்டும் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!

அந்த வகையில் CSKன் இந்த மோசமான தோல்வியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பிரிவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கடந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்ற CSK தொடக்க ஆட்டக்காரர் இந்த ஆண்டு வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து வருகிறார். அதே போல தீபக் சஹார் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. மேலும், கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜடேஜாவால் கடந்த ஆண்டுகளை போல சிறப்பாக செயல்படமுடியவில்லை. இப்படி பல பிரச்சனைகள் CSK அணியில் காணப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அடுத்து வரும் ஆட்டங்களில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறது கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான CSK அணி. இதற்கிடையில் வரும் ஏப்ரல் 9ம் தேதியன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 4வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை DY பாட்டீல் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் XI அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த ஆட்டத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் CSK வீரர்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

அதில் IPL 2022 மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட சமர்ஜீத் சிங், U-19 நட்சத்திரம் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதனை கவனிக்கையில் இந்த 2 புதிய வீரர்களுக்கும் அடுத்த ஆட்டத்தில் பிளேயிங் XI அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆட்டங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட சிலர் பிளேயிங் XI அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது. அந்த வகையில், தொடர் தோல்விகளுக்கு பிறகு CSK அணியில் மாற்றம் இருப்பது அவசியமான ஒன்று எனவும் கணிப்புகள் எழுந்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், சுப்ரான்ஷு சேனாபதி, ஆடம் மில்னே, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சமர்ஜீத் சிங், டெவோன் கான்வே.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!