அடுக்குமாடி குடியிருப்பு மின்மீட்டரில் புதிய சிக்கல் – மின்வாரியம் நடவடிக்கை!!
அடுக்குமாடி குடியிருப்புகளில் இனி ஒவ்வொரு தளத்திலும் தனியாக மின்மீட்டர்கள் பொறுத்த வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்மீட்டர்:
தமிழகத்தில் மின்வாரியத்துறை சார்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. பொதுவாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைத்து வீடுகளுக்கும் சேர்த்து பொதுவாக தரைத்தளத்தில் கரண்ட் மீட்டர்கள், ஸ்விட்ச் பாக்ஸ்கள் அமைக்கப்படுவது வழக்கம். இதனால், ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான கரண்ட் மீட்டர்கள் வைக்கப்படும் நேரத்தில் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆதார் கார்டை இனி இதற்கெல்லாம் பயன்படுத்த முடியாது – புதிய மாற்றம்!!
இதற்கு தீர்வாக, 5 மாடிக்கு மேல் இருக்கும் குடியிருப்புகளில் ஒவ்வொரு தளத்திலும் மின் மீட்டர்கள் அமைக்கப்பட வேண்டும் என தேசிய மின் ஆய்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, 49 அடிக்கு மேல் உயரம் கொண்ட அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். ஏற்கனவே, கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை தவிர்த்து இதற்கு பிறகு கட்டும் வீடுகளில் இந்த முறையை பின்பற்றும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.