தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – வலுக்கும் கோரிக்கை!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி அரசுப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பின் படி, அந்த மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்:
இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அவர்களுக்குப் பின்பு குடும்பத்திற்கு அத்தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. ஆனால், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது கிடையாது; பணிக்கொடை, மருத்துவ காப்பீடு போன்ற எந்த பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது . இந்தப் புதிய பங்களிப்பு திட்டத்தை எதிர்த்து, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சுமார் 19 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை வரவேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி மாதம் அறிக்கை வெளியிட்டார். இது வெற்று அறிவிப்பு என பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள்.
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!
ஆனால் நடக்கவே நடக்காது என்று பொருளாதார சீர்திருத்தவாதிகளால் வர்ணிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளார். அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்துருக்கிறது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் எந்த அரசியல் கட்சிக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனவே, தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.