மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு, புதிய ஓய்வூதிய விதி – முழு விபரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு, புதிய ஓய்வூதிய விதி - முழு விபரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு, புதிய ஓய்வூதிய விதி - முழு விபரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு, புதிய ஓய்வூதிய விதி – முழு விபரங்கள் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒரு புதிய ஓய்வூதிய விதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதியை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஓய்வூதிய விதி

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 31% அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தொடங்கியதை தொடர்ந்து மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையும் விரைவில் வழங்கப்படும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளின் அவல நிலை – திறப்பது கேள்விக்குறிதான்!

இந்த அறிவிப்பில் தெரிவித்ததாவது, அரசு ஊழியர்களுக்கு மரணம் ஏற்பட்டால் அவரின் குழந்தைக்கு மனநலம் பாதிப்பு இருப்பின் அவரது குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஏனெனில் மனநலம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்காததால் அவர்களை பராமரிப்பதிலும் வளர்ப்பதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றவர்களை சார்ந்தே இருப்பார்கள் என்பதால் இந்த குடும்ப ஓய்வூதியம் வழங்குவது மிகவும் அவசியமானது.

தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி உள்ளுர் விடுமுறை – பொதுமக்கள் கோரிக்கை!

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது, அரசு பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர் இறக்கும் போது அவரது குழந்தை மனநல பாதிக்கப்பட்டவராக இருந்தால் அந்த குடும்பத்துக்கு ஓய்வூதிய பலனை வங்கிகள் வழங்க வேண்டும். ஆனால் இந்த பலன்களை வங்கிகள் வழங்குவதில்லை. இந்த குழந்தைகளிடம் நீதிமன்றத்தால் வழங்கப்படும் பாதுகாவலர் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறுகின்றனர். இதனை தற்போது ரத்து செய்து பாதுகாவலர் சான்றிதழின்றி மனநல பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஓய்வூதிய பலனை வங்கிகள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே விதியை மீறும் வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!