ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – Buy Now Pay Later திட்டம்! கட்டணம் இல்லாமல் டிக்கெட்!

0
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் - Buy Now Pay Later திட்டம்! கட்டணம் இல்லாமல் டிக்கெட்!
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் - Buy Now Pay Later திட்டம்! கட்டணம் இல்லாமல் டிக்கெட்!
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – Buy Now Pay Later திட்டம்! கட்டணம் இல்லாமல் டிக்கெட்!

இந்தியாவில் ரயில்வே துறை சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. மேலும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கட்டணம் செலுத்தாமலே டிக்கெட் வாங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Buy Now Pay Later திட்டம்

இந்திய பொது போக்குவரத்தில் ஒன்றான ரயில் போக்குவரத்து பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் இதில் மற்ற பொது போக்குவரத்து சேவைகளை விட குறைவான கட்டணத்தில் பயணசீட்டு வழங்கப்படுகிறது. அதனால் பெரும்பாலானவர்கள் தங்களின் அலுவலகம், சுற்றுலா, இருப்பிடம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் மூலம் பயணித்து வருகின்றனர். அத்துடன் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

மேலும் இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமாக இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. IRCTC இணையதளத்தின் மூலமாக பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தற்போது பயணிகளுக்கு கட்டணம் செலுத்தாமலே டிக்கெட் வாங்குவதற்கு, Paytm நிறுவனம் “Buy Now Pay Later” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான Paytm செயலி மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதன்பின் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணத்தை Paytm நிறுவனத்திடம் செலுத்த வேண்டும். மேலும் இதன் மூலம் பொருள் வாங்கிவிட்டு அதன் பின்னர் 30 நாட்களுக்குள் பணத்தை செலுத்தி விடலாம். இத்திட்டத்தின்படி 60000 ரூபாய் வரை வட்டியே இல்லாமல் 30 நாட்களுக்கு கடன் பெற முடியும். இதனால் பயணிகள் தங்களின் சுற்றுலா பயணத்தின் போது கட்டணம் செலுத்தாமல் டிக்கெட்டை பெற்று பயணம் மேற்கொள்ளலாம். அத்துடன் இத்திட்டத்தின் மூலம் மற்ற பொருட்களையும் வாங்க முடியும். Paytm நிறுவனத்தின் “Buy Now Pay Later” என்ற திட்டம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!