மத்திய அரசின் புதிய ஊதியக்குழு.. விரைவில் நடவடிக்கை – உயரும் சம்பளம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை பரிந்துரை செய்யும் புதிய ஊதிய குழு அமைப்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளது.
புதிய ஊதிய குழு:
மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய குழு மாற்றப்படுகிறது. தற்போது நடைமுறையில் இருந்து வரும் ஏழாவது ஊதிய குழு கடந்த 2013 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. எட்டாவது ஊதிய குழுவிற்கான ஆலோசனை பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளமும் உயர்த்தப்படும்.
WhatsApp பேக்கப் செய்வதில் கட்டுப்பாடு – 15 ஜிபி வரை மட்டுமே இலவசம்!
2024 ஆம் ஆண்டு எட்டாவது ஊதிய குழு அறிவிக்கப்பட்டு 2026க்குள் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே எட்டாவது ஊதிய குழு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம். எட்டாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு அதிக அளவிலான பலன்கள் கிடைப்பது உறுதியாகும்.