ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – தமிழக அரசு ஏற்பாடு!

0
ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு - தமிழக அரசு ஏற்பாடு!
ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு - தமிழக அரசு ஏற்பாடு!
ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – தமிழக அரசு ஏற்பாடு!

தமிழக அரசின் சார்பாக ரேஷன் கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதை போல இந்த ஆண்டும் தற்போது அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கடை

தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை முதலான அனைத்து ரேஷன் கடை பொருட்களும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ரேஷன் கடைகளில் எந்தவித குறையும் இல்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் ஒரே மாதிரியாக உணவுப்பொருட்களை வழங்குவதில் பொதுவிநியோகத் திட்ட பணியாளர்கள் சிறப்பு பங்கு வகித்து வருகின்றனர். மேலும் இந்த ரேஷன்கடை பணியாளர்களின் உடல்நலம் ஒவ்வொரு ஆண்டும் அப்பல்லோ மருத்துவக் குழுவுடன் இணைந்து முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் இதோ!

அந்தவகையில் கடந்த ஜூன் 26ஆம் தேதி சென்னையில் உள்ள நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் கிட்டத்தட்ட 468 பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ளபூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, சைதாப்பேட்டை தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம் மற்றும் பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள் நடத்தும் கிட்டத்தட்ட 583 கடைகளில் பணிபுரிந்து வரும் 727 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடந்த ஜூன் 8-ஆம் தேதி முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதாவது இந்த 727 ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சென்னை மாதவரத்தில் உள்ள விவசாய கூட்டுறவு பணியாளர்கள் பயிற்சி நிலையத்தில் வைத்து அப்பல்லோ மருத்துவ குழுவுடன் இணைந்து முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரை சேர்ந்த 432 ஆண் மற்றும் 295 பெண் பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here