SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம் – முழு விவரம் இதோ!

0
SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம் - முழு விவரம் இதோ!
SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம் - முழு விவரம் இதோ!
SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது எளிதில் வங்கி சேவைகளை பெறும் விதமாக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கி சேவை:

இந்தியாவில் தற்போது வங்கி பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. தற்போது ஒரு சில முக்கிய தேவைகளுக்காக மட்டுமே வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் மேலும் வங்கி சேவைகளை எளிமையாக்கும் வகையில் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி வங்கி சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது. வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், உடல் ரீதியாக ஏதேனும் குறைகள் உள்ளவர்கள் பார்வை குறைபாடு உள்ளோர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பள்ளி & கல்லூரி மாணவர்கள் தினமும் காலை தேசிய கீதம் கட்டாயம் – கர்நாடக அரசு அதிரடி!

இந்த சேவைகள் வங்கிக் கிளையில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள், முகவரியினை கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடு தேடி வரும் வங்கி சேவையை வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அதாவது யோஜனா செயலியில் டோர் ஸ்டெப் பேங்கிங் சேவையினை கிளிக் செய்து காசோலைகள், பணம் அல்லது பிற கோரிக்கைகளை சமர்ப்பித்து எஸ்பிஐ-யின் வீடு தேடி வரும் சேவையினை பெறலாம்.

இந்த செயலி மூலம் பணம் பெற்றுக் கொள்ளுதல், கேஸ் டெலிவரி, காசோலை பெற்றுக் கொள்ளுதல் காசோலைக்கு விண்ணப்பித்தல் பார்ம் 15H பெற்றுக் கொள்ளுதல் மற்றும் டெலிவரி டிராப்ட்ஸ், டெர்ம் டெபாசிட் டெலிவரி, லைஃப் சர்டிபிகேட் அத்துடன் கேஒய்சி ஆவணங்கள் பெற்று கொள்ளுதல் உள்ளிட்ட பல சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதில் நீங்கள் பெற விரும்பும் சேவைகளை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும் . இந்த கட்டணத்துடன் ஜிஎஸ்டியும் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!