SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – UPI இயக்கம் & முடக்கம்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது நிகர வங்கி மற்றும் மொபைல் ஆப் ஆகியவற்றை பயன்படுத்தி தங்கள் கணக்கிற்கான UPI பரிவர்த்தனைகளை எளிதாக இயக்கிக் கொள்ளவும், முடக்கம் செய்யவும் முடியும்.
வங்கி பரிவர்த்தனை
முன்பு போல பரிவர்த்தனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு, வங்கிகளை தேடி சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தற்போது மொபைல் ஆப் மூலமாக ஒரு வாடிக்கையாளர் வங்கி சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இணைய வங்கி முறையை பயன்படுத்தி எந்தவொரு சேவைகளையும் நீங்கள் ஆன்லைனில் எளிதாக செய்யலாம். அந்த வரிசையில் SBI வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளபடி, உங்கள் வங்கி கணக்கின் UPI சேவைகளை இயக்கவோ, முடக்கம் செய்யவோ முடியும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகள் புதுப்பிப்பு ஒப்பந்த புள்ளிகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இவற்றை ஆன்லைன் SBI அல்லது யோனோ SBI வழியாக எளிதாக பெற்றுக்கொள்ள முடியும் என SBI வங்கி அறிவித்துள்ளது. அதன் படி SBI வாடிக்கையாளர்கள், நிகர வங்கி மற்றும் SBI மொபைல் வங்கி பயன்பாடான யோனோ லைட் மூலம் UPI முறையை செயல்படுத்த முடியும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- முதலில் SBI Internet Banking ல் லாகின் செய்யவும்.
- அதில் My Profile என்பதை திறக்கவும்.
- அதில் UPI விருப்பத்திற்கான கணக்குகள் Enable/Disable என்று கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது, உங்கள் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து Enable/Disable ல் உங்களுக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
யோனோ லைட் மூலம் SBI முடக்க அல்லது இயக்க:
- SBI YONO LITE மொபைல் பயன்பாட்டில் லாகின் செய்யவும்.
- UPI TAB ஐ திறக்கவும்.
- UPI விருப்பத்தை தேர்ந்தெடுக்க enable/disable ஐ கிளிக் செய்யவும்.
- இப்போது, உங்கள் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து விருப்பத்தை தேர்வு செய்யவும்.
TN Job “FB
Group” Join Now
- இந்த விருப்பத்தை தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் UPI பரிவர்த்தனைகள் முடக்கப்படும்.
- மேலும் இந்த கணக்கிற்கு UPI ஐப் மீண்டும் பயன்படுத்த முடியாது.
- இதற்கு பிறகு UPI இயக்க விரும்பினால், ஆன் என்ற விருப்பத்தை தேர்வு செய்து இயக்கலாம்.
- BHIM SBI Pay என்பது SBI வழங்கும் UPI பயன்பாடாகும். இது பயனர்கள் பில் செலுத்துவது துவங்கி பண பரிமாற்றம் செய்வது வரை பல அம்சங்களை வழங்குகிறது.