TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டண சலுகை முழு விபரம் வெளியீடு!

0
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கட்டண சலுகை முழு விபரம் வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கட்டண சலுகை முழு விபரம் வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டண சலுகை முழு விபரம் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டண சலுகை குறித்த விபரங்களை தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் யார் யாருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்பது குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேர்வு கட்டண விபரம் :

  • ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் மற்றும் இசுலாமியரல்லாத பிற்படுத்தப்பட்டவர்/பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர் மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • முந்தைய விண்ணப்பங்களில் கோரப்பட்ட உரிமைகளின் அடிப்படையில், மொத்த தேர்வு கட்டண இலவச வாய்ப்புகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
  • விண்ணப்பதாரர் பெறும் இலவச வாய்ப்புகளின் எண்ணிக்கையானது தெரிவின் எந்நிலையிலும் தேர்வாணையத்தால் சரிபார்க்கப்படும்.
  • விண்ணப்பதாரர் தம்முடைய முந்தைய விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை மறைத்து விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து கட்டணவிலக்குத் தவறாகக் கோரும்பட்சத்தில், அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள்/ தேரிவுகளில் கலந்து கொள்வதிலிருந்து ஒரு வருட காலத்திற்கு விலக்கி வைக்கப்படுவார்.

விண்ணப்பதாரர் தேர்வு கட்டண விலக்கு தொடர்பான இலவச சலுகையைப் பெறுவதற்கு “ஆம்” அல்லது “இல்லை” என்ற விருப்பங்களை கவனமாக தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார். விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், தெரிவு செய்யப்பட்ட விருப்பங்களை மாற்றம் செய்யவோ , திருத்தம் செய்யவோ இயலாது.

தமிழக பள்ளிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!

விண்ணப்பதாரர், விண்ணப்பதாரர்களின் தன்விவரப் பக்கத்தின் Application Histroy இல் தோன்றும் தகவல்களைப் பொருட்படுத்தாமல் தேர்வுக் கட்டணச் சலுகை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தங்களின் சொந்த நலன் கருதி கணக்கிட்டு வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

கட்டணச் சலுகை கோரி விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பமானது (விண்ணப்பிக்கப்பட்ட பதவிகளை பொருட்படுத்தாமல்) விண்ணப்பதாரருக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த இலவச வாய்ப்புகளின் எண்ணிக்கையிலிருந்து ஒரு வாய்ப்பு குறைக்கப்பட்டதாக கருதப்படும்.

Tamilnadu’s Best TNPSC Coaching Center – Join Now

அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இலவச வாய்ப்புகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரர் / தேர்வு கட்டணச் சலுகையை பெற விரும்பாத விண்ணப்பதாரர்/ தேர்வு கட்டண சலுகைக்கு தகுதியற்ற விண்ணப்பதாரர் தேர்வு கட்டண சலுகை தொடர்பான கேள்விக்கு எதிரே “இல்லை” என்ற விருப்பதினை தெரிவு செய்ய வேண்டும். அவ்விண்ணப்பதாரர் நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை மூலம் தேவையான கட்டணத்தினை பின்னர் செலுத்தலாம்.

விண்ணப்பதாரர் நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!