TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய செயலி அறிமுகம்!

0
TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் - புதிய செயலி அறிமுகம்!
TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் - புதிய செயலி அறிமுகம்!
TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய செயலி அறிமுகம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வு எழுத விரும்புவோர் நலனுக்காக ஒருங்கிணைந்த மொபைல் செயலியை (Mobile App) தமிழக அரசு அறிமுகப்படுத்தும் என மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

புதிய செயலி அறிமுகம்:

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கொரோனா எதிரொலியால் அரசு போட்டித்தேர்வுகள் யாவும் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்டு வருகிறது. மேலும் அமலில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் திரும்ப பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH குறித்த நிலை இதுதான்? முழு விவரம் இதோ!

இந்நிலையில் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகளை TNPSC வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் குரூப் 2 தேர்வு மே 21ம் தேதியும், குரூப் 4 தேர்வு ஜூலை 2ம் தேதியும் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவுகளும் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு தகுதித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இயல்பாகவே அந்தந்த இணையதள முகவரிக்கு தான் செல்ல வேண்டும். அதிலும் நாம் அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்குள் ஏற்படும் பல்வேறு சிக்கல்களால் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆர்வத்தையும், பொறுமையையும் விண்ணப்பதாரர்கள் இழந்து விடுவார்கள். இந்நிலையில் விண்ணப்பதாரர்களின் சிரமத்தை குறைக்க ஒரு கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த மே7ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நான்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் , பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். மேலும் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள், ஆகியவற்றை செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!