திருமணங்களில் 100 பேர் கலந்து கொள்ள அனுமதி – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
திருமணங்களில் 100 பேர் கலந்து கொள்ள அனுமதி - மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
திருமணங்களில் 100 பேர் கலந்து கொள்ள அனுமதி - மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
திருமணங்களில் 100 பேர் கலந்து கொள்ள அனுமதி – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது வீழ்ச்சியடைந்து வரும் கொரோனா புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்ட மாநில அரசு, திருமணங்கள் உட்பட பிற கூட்டங்களில் 100 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி கொடுத்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்

மாநிலம் முழுவதும் கொரோனா புதிய வழக்குகள் குறைந்துள்ளதால், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநில அரசு கொரோனா தொடர்புடைய வழிகாட்டுதல்களை திருத்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின் கீழ், உத்தரபிரதேசத்தில் இனி 100 நபர்கள் வரை திருமணங்கள் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இது தொடர்பாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி வெளியிட்டுள்ள உத்தரவில், ‘உத்திரப் பிரதேச மாநிலத்தில் இனி திருமணங்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களில் அதிகபட்சமாக 100 பேர் வரை கலந்து கொள்ளலாம். இந்த எண்ணிக்கை முன்னதாக 50 என இருந்தது. இனி வரும் நாட்களில் திறந்த மற்றும் அடைக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் 100 நபர்கள் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் முகக்கவசம் மற்றும் சானிடைசர்களை உபயோகிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மண்டபங்களில் இருக்கைகளை ஏற்பாடு செய்யும் போது சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விழா ஏற்பாடு செய்யப்படும் இடத்தில் கழிப்பறைகளின் சுகாதாரம் மற்றும் தூய்மை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் புதிய முதல்வர் இன்று பதவியேற்றார் – பிரதமர் வாழ்த்து!

இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கு நேரம் தினசரி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடைகள், மால்கள் மற்றும் உணவகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம், உத்தரபிரதேச அரசு வார இறுதி ஊரடங்கை நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய உத்தரவுகள் அனைத்தும் இன்று (செப்டம்பர் 20) முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here