‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் புதிய லுக் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகி இருக்கும் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தற்போது மார்டன் தோற்றத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
நடிகை ரோஷினி
மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார். இந்த சீரியலில், சாதாரண குடும்பத்தை சேர்ந்த அப்பாவி பெண்ணான கண்ணம்மா, பாரதி என்னும் டாக்டரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் மெது மெதுவாக அத்தை சௌந்தர்யாவின் அன்பை சம்பாதிக்கும் கண்ணம்மாவை, சில பல சந்தேகங்கள் காரணமாக வீட்டை விட்டு துரத்துகிறார் பாரதி.
பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை – 2021 சின்னத்திரையில் ஏற்பட்ட மாற்றங்கள்! ஒரு பார்வை!
பின்னர் ஒரு பெண் குழந்தைக்கு தாயான கண்ணம்மா எப்படி தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை போராடி ஜெயிக்கிறார் என்பது தான் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் ஆகும். இந்த கதையின் ஒவ்வொரு பகுதியிலும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து மக்களிடம் இருந்து கிளாப்ஸ்களை அள்ளி இருக்கும் நடிகை ரோஷினி ஒவ்வொரு தமிழக மக்களின் இல்லங்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். இப்படிப்பட்ட வரவேற்புக்கு மத்தியில் சினிமா பட வாய்ப்புகள் கிடைக்கவே அவர் தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.
இதை தொடர்ந்து ஊட்டியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் கண்ணம்மா அவ்வப்போது சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மார்டன் லுக்கில் நடிகை ரோஷினி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹோம்லி லுக்கில் ரோஷினியை பார்த்துள்ள ரசிகர்கள் இப்போது மார்டன் உடையில் இருக்கும் கண்ணம்மாவை ரசித்து வருகின்றனர்.