கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி – அரசு அறிவிப்பு!

0
கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி - அரசு அறிவிப்பு!
கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி - அரசு அறிவிப்பு!
கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி – அரசு அறிவிப்பு!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

வேகமெடுக்கும் கொரோனா பரவல்:

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் பரவலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. அதனால் தற்போது பல்வேறு மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம்,டெல்லி, உத்தரபிரதேசம், மணிப்பூர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தரமற்ற பொங்கல் பரிசுத்தொகுப்பு!

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்ததப்பட்டாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் மக்களின் நலன் கருதி கொரோனா பரவலை கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி டெல்லியில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்குள்ள மூன்று மாநகராட்சிகளில் ஒரு நாளைக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட சந்தை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் அனைத்து கடைகளுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒற்றைப்படை எண் கொண்டுள்ள கடைகள் ஒருநாளும் மற்றும் இரட்டைப்படை எண் கொண்டுள்ள கடைகள் ஒருநாளும் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here