காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி நிறுவப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

0
காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி நிறுவப்படும் - அமைச்சர் அறிவிப்பு!
காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி நிறுவப்படும் - அமைச்சர் அறிவிப்பு!
காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி நிறுவப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு சட்டக் கல்லூரி :

தமிழகத்தில் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் துறை வாரியான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்கப்பட்டு வருகிறது. வ.உ .சி சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் தியாக திருநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து அறநிலையத்துறை சார்பில் இனி திருக்கோயில்களில் மொட்டையடிக்க கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று சட்ட பேரவையில் சிறந்த இதழியலாளர்களுக்கு தமிழக அரசு சார்பாக கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என்று செய்திதுறை அமைச்சர் தெரிவித்தார்.

புதிய அம்சங்களுடன் ‘ஓப்போ கலர் ஓஸ் 12’ – புதிய OS வெளியீடு!

அதனை தொடர்ந்து சட்டம் மற்றும் சிறைத்துறை சார்பில் அமைச்சர் அரசு சட்டக் கல்லூரிகளில் அதிவேக இணைய வசதியுடன் கூடிய கம்பியில்லா மின் மண்டலம் நிறுவப்படும் என தெரிவித்தார். மேலும் அரசு சட்டக் கல்லூரிகளில் சர்வதேச பயிற்சிப் பட்டறைகள் கருத்தரங்குகள் மற்றும் சட்ட மாநாடுகள் நடத்தப்படும் தென்காசியில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழக சத்துணவு துறையில் காலிப்பணியிடங்கள், ஓய்வூதியம் – அரசுக்கு வலியுறுத்தல்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும். கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய சிறைச் சாலைகள் அமைக்கப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்ட பேரவையில் தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி சிறைவாசிகளுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!