ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக புதிய சட்டம்? நீதிமன்றம் கருத்து!
ஆன்லைன் விளையாட்டுகளினால் பலர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, புதிய சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டு:
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மொபைல் போனின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதனை தொடர்ந்து அனைவரும் ஆன்லைன் மூலம் கேம் விளையாடி தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால் இன்டர்நெட்டில் தனது நாள் முழுவதையும் கழித்து வருகின்றனர். மொபைல்களின் ஆதிக்கம் அதிகரிப்பதால் செயலிகளின் பயன்பாடு அதிகமாகி உள்ளது. வித விதமான விளையாட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் 9 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தற்போது இளைஞர்கள் பப்ஜி மற்றும் ஃப்ரீ பையர் போன்ற விளையாட்டுகளில் அடிமையாகி தனது நாள் முழுவதையும் அதில் செலவிடுகின்றனர். அதனை தொடர்ந்து பணம் கட்டியும் சிலர் விளையாடி வருகின்றனர். இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பலர் தங்களது பணம் மற்றும் சிலர் உயிரை இழந்துள்ளனர். ஆன்லைனில் மோசடி செய்யும் விளையாட்டுகள் இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
TN Job “FB
Group” Join Now
இதனை தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆன்லைன் விளையாட்டுக்களால் பல உயிர்கள் பறிபோவதால் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறினார். ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களில் புதிய சட்டம் இயற்றப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தந்த நிபந்தனைகளை கருத்தில் கொண்டு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.