தமிழக பல்கலைக்கழங்களில் புதிய மொழி பாடம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக பல்கலைக்கழங்களில் புதிய மொழி பாடம் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழக பல்கலைக்கழங்களில் புதிய மொழி பாடம் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழக பல்கலைக்கழங்களில் புதிய மொழி பாடம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்பட்ட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து ஜப்பான் தூதரக அதிகாரிகளை அவர் தலைமை செயலகத்தில் சந்தித்துள்ளார்.

கல்லூரிகளில் ஜப்பான் மொழி:

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் ஏகப்பட்ட பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த பல்கலைக்கழங்களில் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்றார் போல பல பாடத்திட்டங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு ஜப்பான் மொழி ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதன் தொடர்ச்சியாக சென்னை தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை ஜப்பான் தூதரக அதிகாரிகள் இன்று சந்தித்தனர். அவர்களுடனான சந்திப்பிற்கு பின் உயர்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே அறிவித்தது போல ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் sandwich course இந்த ஆண்டு சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி & தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வேலூரில் 3.5 ஆண்டு சாண்ட்விச் கோர்ஸ் ஆகியவை தொடங்கப்படும் என தெரிவித்தார்.

பான் & ஆதார் கார்டு இணைப்பு கட்டாயம் – மீறினால் இரு மடங்காக அபராதம்!

பின் உயர் கல்வித்துறை – மேன்டோ நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, அதனால் மாணவர்களுக்கு நடத்தப்படும் 7 செமஸ்டர்களில் 2 செமஸ்டர்கள் மேன்டோ பயிற்சி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி பயிற்றுவிப்பது குறித்து தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் ஜப்பான் மொழியை பயில ஆர்வம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here