SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

0
SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் பணியிடங்கள் குறித்த விவரத்தை காண்போம்.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் ஆலோசகர்கள், இயக்குனர்கள் ஆகிய பணியிடங்களை உள்ளடக்கிய 211 காலியிடங்கள் உள்ளது. இதில் 207 காலியிடங்கள் FLC ஆலோசகர்கள் மற்றும் 4 காலியிடங்கள் FLC இயக்குநர்கள் பதவிகளுக்கானது. இப்பணிகளுக்கு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளை நியமிக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் உள்ளூர் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஏனெனில் அவர்கள் நிதி நிறுவனங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை வழங்க வேண்டியுள்ளது. மேலும் கணினிகளில் பணிபுரியும் அறிவு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஸ்மார்ட் மொபைல் போன் வைத்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 60 முதல் 63 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் இறுதியாக ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த  நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். அல்லது வங்கியின் இணையதளத்தில் அதனை பதிவேற்றம் செய்யப்படும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. எனவே, விண்ணப்பிக்க மேற்சொன்ன தகுதி இருப்பவர்கள் sbi.co.in என்ற அதிகார்பூர்வ இணையத்திற்கு செல்ல வேண்டும். அதன் முகப்புப் பக்கத்தில், ENGAGEMENT OF RETIRED BANK OFFICERS ON CONTRACT BASIS -யின் கீழ் “Apply Online” என்பதைக் கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

Reliance நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – 10வது முடித்தவர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம்..!

இறுதியாக உங்களின் விண்ணப்ப படிவத்தை எதிர்கால தேவைக்காக பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம். விண்ணப்ப பதிவுகள் கடந்த ஜூன் 15ம் தேதி தொடங்கியது. மேலும், ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சென்று பார்வையிடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!