தமிழகத்தில் புதிதாக 3000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – சிட்கோ நிறுவனம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் புதிதாக 3000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - சிட்கோ நிறுவனம் அறிவிப்பு!
தமிழகத்தில் புதிதாக 3000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – சிட்கோ நிறுவனம் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பலருக்கும் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் சிட்கோ ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் பொதுத்துறை நிறுவனமான ‘சிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்க திட்டமிட்டது. அத்துடன் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவை அமைப்பதற்கான இடத்தை கண்டறிய பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை பகுதியில் இதற்கான இடத்தை நிறுவனம் தேர்வு செய்தது. இதற்கென அரசிடமிருந்து 44.3 ஏக்கர் நிலத்தை அந்நிறுவனம் பெற்றுள்ளது.

அதன்படி தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைப்பதற்கான பணியை கடந்த 2018ம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கியது. இதற்கான பணிகளை ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகமை உதவியுடன் மேற்கொண்டது. இதையடுத்து தற்போது நிர்வாக அலுவலகம், கூட்டரங்கம், மருந்தகம், வங்கி, உணவகம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பொது சேவைகள் மைய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 2.22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடித்துள்ளது. அதன்படி தொழில்நுட்ப ஜவுளி பூங்கா தமிழக முதல்வர் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

தமிழகத்தில் முதுகலை & PHD படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவக்கம் – அறிவிப்பு வெளியீடு!

இதையடுத்து இதன் மூலமாக கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து சிட்கோ நிர்வாகத்தினர் கூறியிருப்பதாவது, சிட்கோவின் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் விரைவில் தனியார் தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இதில் அனைத்து நிறுவனங்களும் செயல்படும்போது 2,000 பேருக்கு நேரடியாகவோ மற்றும் 1,000 பேருக்கு மறைமுகமாகவோ என மொத்தமாக 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!