Infosys நிறுவனத்தில் ஆப்கேம்பஸ் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!
இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான (IT) இன்போசிஸ், ஆப்கேம்பஸ் மூலம் இந்த ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்கான தகுதி, வேலை விவரம், விண்ணப்ப முறைகள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புகள்
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் இந்த ஆண்டுக்கான புதிய வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தற்போது 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் பட்டம் பொறியாளர்களை பெற்ற சிறப்புப் புரோகிராமர் மற்றும் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் துறைகளில் வேலைக்கு அமர்த்துவதற்கான ஆப் கேம்பஸ் தேர்வை நடத்த உள்ளது.
தமிழகத்தில் அக்.6, 9ம் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் – மாநில ஆணையர் அறிவிப்பு!
இந்த அரியதொரு வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இன்போசிஸ் ஆப் கேம்பஸ் டிரைவ் 2021ல் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த தேர்வு செயல்முறை ஆன்லைன் மற்றும் மெய்நிகர் நேர்காணலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில் தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் பணியில் ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் மற்றும் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியருக்கு ஆண்டுக்கு ரூ .5 லட்சம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
தகுதி விவரங்கள்:
- விண்ணப்பதாரர்கள் BE, BTech, ME, MTech, MCA, MSc போன்ற பாடங்களில் 5 வருட ஒருங்கிணைந்த படிப்பை முடித்திருக்க வேண்டும்
- மேலும் சம்பந்தப்பட்ட துறையில் பரிந்துரைக்கப்பட்ட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
- ஆன்லைன் சோதனை
- மெய்நிகர் நேர்காணல்
பணி விவரம்:
ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் (SP): இன்போசிஸின் நிறுவனத்தின் பவர் புரோகிராமர் பணிக்கு, பாலி கிளாட்ஸ் ப்ரோக்ராமிங், நிரலாக்கம், முழு-ஸ்டாக் திறன்கள், கோடிங், விரைவான தளங்களை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றில் நிபுணர்களாக இருக்க வேண்டும்.
அக்டோபர் 3 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (DSE): இப்பணிக்கு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன், பிக் டேட்டா, கிளவுட், இணைய பாதுகாப்பு, தரவு ஆலோசனை மற்றும் டிஜிட்டல் வர்த்தகம், தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற திறன்களை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப முறை:
- இன்போசிஸ் நிறுவனத்தின் infosys.com அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
- ஆஃப் கேம்பஸ் டிரைவ் இணைப்பை பார்க்கவும்.
- role என்பதில் கிளிக் செய்யவும்.
- இப்போது அதில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை படித்து உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.
- நீங்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவராக இருந்தால் உங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம்.
- பரிந்துரைக்கப்பட்ட வேலைகளுக்கு உங்கள் சுயவிவரம் பொருத்தமாக இருந்தால் அழைப்பு விடுக்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.