IBM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – தகுதி, பணியிடம் விளக்கம்!

0
IBM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - தகுதி, பணியிடம் விளக்கம்!
IBM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - தகுதி, பணியிடம் விளக்கம்!
IBM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – தகுதி, பணியிடம் விளக்கம்!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல முன்னணி தொழில்நுட்ப சேவை நிறுவனமான IBM, தனது இந்திய அலுவலகங்களில் புதிய பணியாளர்களை அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இப்பணி தொடர்பான கல்வித்தகுதி, பணியிடம் குறித்த விளக்கங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய வேலைவாய்ப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின் (IBM) கார்ப்பரேஷன் நிறுவனம், நிதி சேவைகள், சுகாதாரம், அரசு, வாகனம், தொலைத்தொடர்பு மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்து முக்கிய தொழில்களுக்குமான சேவைகளை கடந்த 110 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கு அதிகமான உலகளாவிய பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது கிளை அலுவலகங்களில் அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியரிங் பதவிக்கு புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செப்.21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான IBM, தனிநபர் மற்றும் குழு நோக்கங்களில் கவனம் செலுத்துவதோடு, தொழில்முறை செயல்திறன் வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பட்டதாரிகள் புதிய வேலைவாய்ப்புகளை பெற உள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. இந்த பணியமர்த்தலில் குறிப்பாக பல்வேறு தளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் வடிவமைப்பு பயன்பாடுகள், எழுத்து குறியீடுகள், சோதனைகள், பிழைத்திருத்தம் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை பராமரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு ஜாவா, பைதான், நோட்.JS மற்றும் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் லைப் சைக்கிள் கான்செப்ட்ஸ் ஆகியவற்றில் நிரல் அறிவு திறன் கொண்ட நபர்களை நிறுவனம் தேடுவதாக IBM கூறியுள்ளது. இப்புதிய பணியமர்த்தல் ஏற்கனவே அறிவிக்கபட்டபடி, மும்பை, புனே, டெல்லி, குர்கான், நொய்டா, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட இருக்கிறது. புதிய பணிக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தை பொருத்தளவு, தேவையான தளங்களில் தொழில்நுட்ப கட்டிடக்கலைகளை வரையறுத்தல் ஆகியவை முக்கியமாகும்.

இதனுடன் பகுப்பாய்வு, மதிப்பாய்வு செய்தல், கட்டிடக்கலை விருப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றிற்கும் சிறப்பு கவனம் கொடுக்கப்பட உள்ளது. தற்போது இப்பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மென்பொருள் தொகுப்புகள், நிரல்கள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருள்களை ஒருங்கிணைத்தல், பயன்பாட்டு கூறுகளை வடிவமைத்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றில் அனுபவம் இருக்க வேண்டும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் BE, MTech, MSc, MCA in CS அல்லது IT அல்லது கணிதம் ஆகிய பிரிவுகளில் 60%த்துடன் தங்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – அதிரடி ரீசார்ஜ் ஆபர்கள் இதோ!

இதற்கிடையில் IBM நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் மட்டும் சுமார் 3.4 சதவீதம் உயர்ந்து 18.7 பில்லியனாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில் சராசரியாக 1 முதல் 21 வருட தொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 3.7 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஊழியர்களின் சம்பளம் 2.2 லட்சம் முதல் 7.3 லட்சம் வரை இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு இணை அமைப்பு பொறியியலாளருக்கு, ஆண்டுக்கு சுமார் ரூ.4.25 லட்சம் வரை ஊதியம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!