Capgemini நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – செப்.1 வரை விண்ணப்பிக்கலாம்!

0
Capgemini நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - செப்.1 வரை விண்ணப்பிக்கலாம்!
Capgemini நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - செப்.1 வரை விண்ணப்பிக்கலாம்!
Capgemini நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – செப்.1 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் Capgemini என்ற பன்னாட்டு நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. அதனால் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்கும் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

பொறியியல்

பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்ட Capgemini என்ற பன்னாட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது புதிய வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக Capgemini நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் கீழ், 2021 ஆம் ஆண்டு படித்து முடித்துள்ள பொறியாளர்கள் மற்றும் MCA பட்டதாரிகள் நேர்முகத்தேர்வுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் விண்ணப்பதாரர்கள் M.E மற்றும் M.Tech மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம், தகவல் அறிவியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு பெற்றிருப்பவர்களாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தேர்வுகளில் குறைந்தபட்சமாக 60 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில் தேர்வு செய்யப்படும் ஊழியர்கள் கேப்ஜெமினி நிறுவனத்தின் எந்தவொரு இடத்திலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேவை ஏற்படின் ஷிப்டு முறைகளிலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களது தொழில்நுட்ப மதிப்பீடு, MCQ- அடிப்படையிலான ஆங்கில தகவல் தொடர்பு சோதனை, விளையாட்டு அடிப்படையிலான திறன் சோதனை, நடத்தை திறன் விவரக்குறிப்பு, தொழில்நுட்ப மற்றும் மனிதவள நேர்காணல் உள்ளிட்ட நிலைகளில் கணக்கிடப்பட உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!