OLA Electric Scooter தயாரிப்பு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!

2
OLA Electric Scooter தயாரிப்பு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - முழு விவரம் இதோ!
OLA Electric Scooter தயாரிப்பு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - முழு விவரம் இதோ!
OLA Electric Scooter தயாரிப்பு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!

தமிழகத்தில் அமைந்துள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய ஆட்சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்புகள்

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருசக்கர வாகன உற்பத்தியில் தற்போது அடியெடுத்து வைத்திருக்கும் ஓலா நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று தனது S1 மற்றும் S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய ஓலா நிறுவனம் அதற்கான முன்பதிவுகளையும் துவங்கியது. தொடர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் நிறம், வடிவமைப்பு, விலை உள்ளிட்ட விவரங்களை ஓலா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பாஸ்போர்ட்டில் இணைப்பது எப்படி?

பின்னர் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து செப்டம்பர் 15 ஆம் தேதியன்று ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையை இந்நிறுவனம் துவங்கியது. விற்பனை துவங்கிய 2 நாட்களில் சுமார் ரூ.1,100 கோடி வருவாயை பெற்று புதிய சாதனையை ஓலா நிறுவனம் படைத்தது. குறிப்பாக முதல் நாள் விற்பனையில் மட்டும் சுமார் 600 கோடி பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒரு ஆண்டுக்குள், குறிப்பிட்ட அளவுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியை தயாரிக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது.

Airtel நிறுவனம் வழங்கும் IPL ரீசார்ஜ் ஆஃபர் – முழு விபரங்கள் இதோ!

அந்த வகையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் சுமார் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக அந்நிறுவனத்தின் CEO சமீபத்தில் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அமைந்துள்ள ஓலா தயாரிப்பு நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை [email protected] மற்றும் https://olaelectric.com/ என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!