Paytm நிறுவனத்தில் 20,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

2
Paytm நிறுவனத்தில் 20,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Paytm நிறுவனத்தில் 20,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Paytm நிறுவனத்தில் 20,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிஜிட்டல் பரிமாற்ற சேவை வழங்குனரான Paytm நிறுவனம், இந்தியாவின் சிறிய நகரங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் 20,000 விற்பனை அதிகாரிகளை பணியமர்த்த இருப்பதாகவும் அதற்கான செயல்முறைகளை தற்போது துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய பணியமர்த்தல்:

டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் நிதி சேவைகளில் முதன்மை வகிக்கும் Paytm நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்க இந்தியா முழுவதும் சுமார் 20,000 விற்பனை நிர்வாகிகளை பணியில் அமர்த்தும் செயல்முறையை தொடங்கியுள்ளது. இது தொடர்பான Paytm பணியமர்த்தல் அறிவிப்பின் படி, புதிதாக பணியமர்த்தப்பட உள்ள கள விற்பனை நிர்வாகிகள் (FSEs) மாத சம்பளம் மற்றும் கமிஷன்களில் ரூ. 35,000 க்கும் மேல் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தவிர இந்நிறுவனம் இளைஞர்கள் மற்றும் இளங்கலை பட்டதாரிகளை FSE ஆக பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை – மாநில அரசு அறிவிப்பு!

புதிய வேலை வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் குறிப்பிடுகையில், ‘Paytm நிறுவனம் புதிய FSE ஊழியர்களை பணியமர்த்த தொடங்கியுள்ளது. இது சிறிய நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில், குறிப்பாக கொரோனா தொற்று நோய்களின் போது வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 , 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற அல்லது பட்டதாரி நபர்களுக்கு கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பாகும்.

இப்புதிய பணியமர்தல், டிஜிட்டல் பேமெண்ட் பற்றி பெண் வியாபாரிகளுக்கு கற்றுத்தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.Paytm ஆல் இன் ஒன் கியூஆர் குறியீடுகள், Paytm ஆல் இன் ஒன் பிஓஎஸ் இயந்திரங்கள், Paytm சவுண்ட் பாக்ஸ் மற்றும் அந்நிறுவனத்தின் சுற்றுச்சூழல் அமைப்பான வாலட், யுபிஐ, Paytm போஸ்ட்பெய்ட், வணிகக் கடன்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இந்த FSE ஊக்குவிக்கும். மேலும் வணிகர்களுக்கு வெகுமதி அளிக்கும் உத்தரவாதமான கேஷ்பேக் சலுகையையும் கொடுப்பதுடன் சவுண்ட் பாக்ஸ் மற்றும் IoT சாதனங்களையும் இது வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக அன்றாட வாழ்க்கையில் Paytm சேவைகளை பயன்படுத்தும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வணிகர்களை, இன்னும் மேம்படுத்துவதை இலக்காக கொண்டு இந்த திட்டத்திற்காக ரூ.50 கோடியை இந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது. Paytm நிறுவனத்தின் இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதுடன் 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பட்டதாரிகள் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் Paytm செயலியைப் பயன்படுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இரு சக்கர வாகனம் உடையவர்கள், முன் விற்பனை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழி மற்றும் இடங்கள் குறித்த அறிவு இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதனிடையே Paytm நிறுவனத்தின் மொத்த விற்பனை மதிப்பு சுமார் ரூ .4 லட்சம் கோடியாக உள்ளதாகவும் சமீபத்தில், Paytm பேமெண்ட்ஸ் வங்கி ஃபாஸ்டேக்குகளை வெளியிடுவதில் 1 கோடிக்கு மேல் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. சிறப்பான பதிவு நான் விண்ணப்பித்தும் பதில் இது வரை வரவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!