TCS, Infosys, Wipro & HCL Tech நிறுவனங்களில் 2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்!

0
TCS, Infosys, Wipro & HCL Tech நிறுவனங்களில் 2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - வெளியான முக்கிய தகவல்!
TCS, Infosys, Wipro & HCL Tech நிறுவனங்களில் 2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - வெளியான முக்கிய தகவல்!
TCS, Infosys, Wipro & HCL Tech நிறுவனங்களில் 2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2021-22ம் நிதியாண்டில் TCS, Infosys, Wipro, Cognizant, HCL Tech, Tech Mahindra, Accenture, Capgemini உள்ளிட்ட முன்னணி IT நிறுவனங்கள் 2.3 லட்சத்துக்கும் அதிகமான புதிய பட்டதாரிகளை பணியமர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலை வாய்ப்பு

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பல்வேறு வகையான துறைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், உலகளவில் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் சேவைகள் மட்டும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021-22ம் நிதியாண்டின் முதல் 3 காலாண்டில் மட்டும் TCS, இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட், HCL Tech, டெக் மஹிந்ரா, கேப் ஜெமினி உள்ளிட்ட IT நிறுவனங்கள் 2.3 லட்சத்துக்கும் அதிகமான புதிய பட்டதாரிகளை சேர்த்துள்ளது.

திருப்பதியில் தரிசன சேவைக்கட்டணம் உயர்வு – தேவஸ்தான முடிவால் பக்தர்கள் அதிர்ச்சி!

இதுவே இந்நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்ட புதிய பணியமர்த்தலின் அதிகபட்ச சாதனை எண்ணிக்கையாகும். இதனுடன் சேர்ந்து, வரும் 2023ம் நிதியாண்டில் இந்த புதிய பணியமர்த்தல் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான அறிவிப்பது இந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2021-22ம் நிதியாண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் ஏற்கனவே சுமார் 77,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளதாகவும், மேலும் அடுத்த காலாண்டில் (ஜனவரி-மார்ச் 2022) இன்னும் சிலரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் TCSன் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் வருவாய் தெரிவித்துள்ளார்.

அதே போல காக்னிசென்ட், இந்தியாவில் 33,000 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்தியது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ல் 17,000 ஆக இருந்தது. இதற்கிடையில், விப்ரோ நிறுவனம் முந்தைய ஆண்டை விட 2021-22ம் நிதியாண்டில் 70 சதவீதம் புதிய திறமையாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்று CEO தியரி டெலாபோர்ட் கூறியுள்ளார். இப்போது ஆராய்ச்சி நிறுவனமான UnearthInsightன் சமீபத்திய அறிக்கையின்படி, 2022ம் நிதியாண்டின் இறுதிக்குள், சிறந்த தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் வேலை செய்யும் புதியவர்களின் எண்ணிக்கை சுமார் 3,50,000 முதல் 3,60,000 ஆக இருக்கும் என்று கூறுகிறது.

Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 84 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம்! முழு விவரம் இதோ!

இதற்கிடையில் IT நிறுவனங்களின் தேய்மானம் தொடர்ந்து கவலைக்குரிய விஷயமாக உள்ளதாக தரவுகள் கூறுகிறது. அதாவது, பொறியியல் பட்டதாரிகள் தங்கள் பங்கை சரியாக செய்தால் ஒன்றுக்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை தேர்வு செய்ய வாய்ப்பு இருக்காது. IT நிறுவனங்கள் பகுப்பாய்வு சிந்தனை, மன அழுத்த மேலாண்மை, தகவல் தொடர்பு திறன், உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் நேர்மறையான அணுகுமுறை ஆகியவற்றை கொண்ட புதியவர்களை தேடுகிறதாக பிரபல HR நிறுவனமான Teamlease Edtechன் இணை நிறுவனர் நீதி ஷர்மா கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!