Uber நிறுவனத்தில் 500 இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு – டிசம்பருக்குள் ஆட்சேர்ப்பு!

0
Uber நிறுவனத்தில் 500 இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு - டிசம்பருக்குள் ஆட்சேர்ப்பு!
Uber நிறுவனத்தில் 500 இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு - டிசம்பருக்குள் ஆட்சேர்ப்பு!
Uber நிறுவனத்தில் 500 இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு – டிசம்பருக்குள் ஆட்சேர்ப்பு!

பெங்களூரு, ஹைதராபாத் தொழில்நுட்ப மையங்களுக்கு மேலும் 500 இன்ஜினியர்களை பணியமர்த்த Uber நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பின்னர் TCS, Wipro, Infosys, HCL போன்ற பிரபல ஐடி நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளன. அந்த வரிசையில் Uber நிறுவனம் தனது இந்திய தொழில்நுட்ப மையங்களில் 2022 டிசம்பருக்குள் மேலும் 500 இன்ஜினியரிங் பட்டதாரிகளை பணியமர்த்த உள்ளதாக கூறியுள்ளது. ஏற்கனவே ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் 1,000 பணியாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனம 2021 இல் இப்பிரிவில் 250 பேரை புதிதாக பணியமர்த்தியது. இந்த ஆண்டு எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளதால் பட்டதாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு! முழு விபரங்கள் இதோ!

Uber நிறுவனம் அமெரிக்கா, கனடா, லத்தீன் அமெரிக்கா, ஆம்ஸ்டர்டாம் மற்றும் இந்தியாவில் உள்ள அதன் மையங்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்ப மையங்களிலும் தனது பணிகளை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் புதிய ஊழியர்களையும் பணியமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனாவால் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்த பிரபல நிறுவனங்களின் ஊழியர்கள் தற்போது நோய் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இதனை முற்றிலும் விரும்பாத பலர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

எனவே இதனை தவிர்க்கும் நோக்கில் அலுவலகத்திற்கு திரும்பும் தனது ஊழியர்களுக்கு சில சலுகைகளையும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கொரோனா காலகட்டத்திலும் அபார வளர்ச்சி அடைந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை குஷிப்படுத்தும் நோக்கில் போனஸ், சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!