தமிழக அரசு துறையில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு துறையில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு துறையில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு துறையில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அதன்படி குரூப் 2,2A தேர்வு மற்றும் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதற்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்து,முதன்மை தேர்வு கடந்த மாதம் 21ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூலை மாதம் குரூப் 4 & VAO தேர்வும் நடைபெற்றது.

தமிழகத்தில் சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

இந்த தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி பகுதியில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் கல்வித் தகுதி குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 21 க்குள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 37 வயது வரை இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் . மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும் என்றும் பணியிடம் காலியாக உள்ள கிராமம் மற்றும் 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும் இவை இல்லாத நிலையில் குறுவட்ட அளவிலும் தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள வட்ட அளவில் மட்டுமே தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!