தமிழகத்தின் 3 மாவட்டங்களில் புதிதாக ஐடி பார்க் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் புதிதாக ஐடி பார்க் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் புதிதாக ஐடி பார்க் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் புதிதாக ஐடி பார்க் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக ஐடி பார்க் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

புதிய ஐடி பார்க் :

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் 13 ம் தேதி தனது முதல் நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் முதல் முறையாக வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 23ம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது.

IPL 2021 : புதிதாக 2 அணிகள், குறைந்தபட்ச விலை ரூ.2000 கோடி – BCCI அறிவிப்பு!

இன்று சட்டசபையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சி துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் ஆகியவை நடைபெற்றது. தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, தங்கள் துறையின் அறிவிப்புகளை வெளியிட்டனர். இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் வெளியிட்டார்.

அறிவிப்புகள் :

  • தமிழகத்தில் வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக ஐடி பார்க் அமைக்கப்படும்.
  • தருமபுரி, விருதுநகரில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்படும்.
  • வெளிச்சந்தையில் நெய்தல் என்ற புதிய வணிக பெயரில் உப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படும்
  • உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழை கால நிவாரணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
  • ‘வலிமை’ என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • ராணிப்பேட்டை சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பேட்டையில் தோல் பொருள் பூங்கா 250 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்படும்.
  • அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும்.
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
  • அதிக அளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதி சார்ந்த அறைகலன் உற்பத்தித் தொழில்களை ஏற்படுத்தவும் நாட்டிலேயே முதல் முறையாக பன்னாட்டு அறைகலன் பூங்கா 1,100 ஏக்கரில் தூத்துக்குடியில் உருவாக்கப்படுகிறது.
  • முதற்கட்டமாக 500 ஏக்கரில் அமையவிருக்கும் இந்த அறைகலன் பூங்கா பணிகளை டிசம்பர் 2021-க்குள் முடிக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!