தமிழகத்தில் புதிய தொழில் பூங்கா – 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

2

தமிழகத்தில் புதிய தொழில் பூங்கா – 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் புதிய தொழில் பூங்காவினை கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். 114 கோடி செலவில் அமைய உள்ள இந்த தொழில் பூங்காவினால் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப பணிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு !

நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை என்பது பல காலமாக இருந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் இதற்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. மத்திய/ மாநில அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி வருகிறது.

TN Police “FB Group” Join Now

படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது.

தொழில் பூங்கா !!

தற்போது இந்த பிரச்சனையினை நீக்க கோவை மாவட்ட விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 114 கோடி மதிப்பீட்டிலான தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்பட உள்ளது. மேலும் திருச்சி மாவட்ட நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடி மதிப்பீட்டில் மற்றொரு புதிய தொழில் பூங்காவும் அமைக்கப்படவுள்ளது. இதனை தமிழக மின்னணு நிறுவனம் நிறுவுகிறது. இதன் மூலம் சென்னை, மதுரை, கோவை உட்பட இரண்டாம் நிலை நகரங்களில் புதிய பொருளாதார நிறுவனங்கள் வரவுள்ளன.

இந்த தொழில் பூங்காக்கள் அமைவதனால் 60 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் வாயிலாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பனிகள் தழைத்தோங்கிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here