TNPSC குரூப் 2, 2A தேர்வர்களுக்கு புது சிக்கல் – தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வர்களுக்கு புது சிக்கல் - தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!
TNPSC குரூப் 2, 2A தேர்வர்களுக்கு புது சிக்கல் - தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!
TNPSC குரூப் 2, 2A தேர்வர்களுக்கு புது சிக்கல் – தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 2021 செப்டம்பர் மாதம் எழுதிய தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு எழுதி 5 மாதங்களை கடந்தும் சான்றிதழ் கிடைக்காததால் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

அரசு தேர்வுக்கு செல்வோர் அவதி:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் நிலவி வந்தது . இதனால் பொதுமக்கள் பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அரசு சார்ந்த எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. இருப்பினும் தற்போது நிலைமை சரியாகி வருவதால் கடந்த 18ம் தேதி TNPSC, குரூப் 2 குரூப் 2A தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,1.5 லட்சம் மாணவர்கள் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தட்டச்சு, கணினி தேர்வுகளை அரசு பணிக்கு கட்டாயமாக்கியுள்ளது.

நிறைமாத கர்ப்பத்திலும் நடிப்பில் சவால் விடும் ‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸா – குவியும் வாழ்த்துக்கள்!

இந்த சூழலில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு ஐந்து மாதங்களை கடந்தும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இதுவரை தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. மேலும் தட்டச்சு, சுருக்கெழுத்து ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்பு 90 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும் என்பது நடைமுறையில் உள்ள விதி ஆகும். அண்மையில் வெளியான குரூப் 2 குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ் கட்டாயம் ஆகும். எனவே கடந்த ஆண்டு நடந்து முடிந்த தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான சான்றிதழ் வழங்கபடாமல் இருப்பதால் எப்படி குரூப் 2 , குரூப்2A தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்க்கு மார்ச் 20 கடைசி தேதி ஆகும். இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ்களின் எண் பதிய வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடந்து முடிந்த தேர்வுக்கான சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் தட்டச்சு பயிலகங்களும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றன. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!