விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ரியாவின் புதிய அவதாரம் – வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியல் நடிகை ரியாவின் புதிய அவதாரம் - வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியல் நடிகை ரியாவின் புதிய அவதாரம் - வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ரியாவின் புதிய அவதாரம் – வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அதிக இளம் ரசிகர்களை குவித்த ராஜா ராணி 2 தொடரின் மருமகள் சந்தியாவாக நடித்த ஆலியா குழந்தை பிறந்த காரணத்தால் சீரியலை விட்டு விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக மாடல் அழகி ரியா நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் தற்போது அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்த அசத்தல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2 ரியா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ப்ரைம் டைம் சீரியலில் ஒன்றான ராஜா ராணி 2 அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்து ரசிகர் பெருமக்களை குவித்து வருகிறது. இந்த சீரியலில் ஒரு பக்கம் வீட்டுக்கு நல்ல மருமகளாகவும், தன் மகனுக்கு நல்ல மனைவியாகவும் வாழ நினைக்கும் மாமியார் மற்றும் மறு பக்கம் தனது அன்பு மனைவி சந்தியாவின் கனவை நிறைவேற்ற துடிக்கும் கணவன் சரவணன், இதற்கிடையில் சந்தியா மாட்டிக்கொண்டு எப்படி கனவை அடைவார்? அம்மாவை மீறி எப்படி தனது மனைவி ஆசையை நிறைவேற்றுவார்? என்று பல திருப்பங்களுடன் கதை நகர்கிறது.

Exams Daily Mobile App Download

ராஜா ராணி 2 ல் சந்தியாவாக ஆலியா நடித்து வந்த நிலையில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாகி குழந்தை பிறந்த காரணத்தால் சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக சீரியலில் மாடல் அழகி ரியா நடித்து வரும் நிலையில் தற்போது தொடர் சூடு பிடித்துள்ளது என்றே சொல்லலாம். இந்த சீரியல் தான் ரியாவுக்கு முதல் சின்னத்திரை அறிமுகமாகும். இவரை ஆரம்பத்தில் ரசிகர்கள் ஏற்று பார்ப்பார்களா? என்ற குழப்பத்துக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் சந்தியா கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்து ரசிகர்களிடம் ஆதரவை பெற தொடங்கியுள்ளார்.

பாக்கியா தொழில் தொடங்க அனுமதி வழங்கும் கோபி, மாஸ் என்ட்ரி கொடுத்த பாக்கியா – சீரியலில் திடீர் திருப்பம்!

எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை ரியா தினமும் எதாவது ஒரு போஸ்ட் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருவார். அதற்கென தனி ரசிகர்களும் இன்ஸ்டாகிராமில் அவரை விரும்பி பின்தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் அவர் ஜிம்மில் செய்த வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரலாக பரவி பல கமெண்டுகளை குவித்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!