திருமங்கலத்தில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை – அமைச்சர் பேட்டி!

0
திருமங்கலத்தில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை - அமைச்சர் பேட்டி!
திருமங்கலத்தில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை - அமைச்சர் பேட்டி!
திருமங்கலத்தில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை – அமைச்சர் பேட்டி!

திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ஹோமியோபதி மருத்துவமனை

தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி கட்டடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, திருமங்கலத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டு கீழ்பாக்கத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 7 ஏக்கர் பரப்பளவில் 1982ம் ஆண்டு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

முதலில் டிப்ளமோ வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து 1985ம் ஆண்டு ஹோமியோபதி பட்டப்படிப்பு தரம் உயர்த்தப்பட்டது. இதில் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் இக்கல்லூரி தாழ்வான பகுதியாக இருந்ததால் மழைக்காலங்களில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியது. அதனால் வகுப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதனால் கல்லூரியை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் ஏற்பாடு – சுற்றுலா துறை அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் இக்கல்லூரி பகுதியில் கால்வாய் அமைத்தால் கல்லூரியில் தண்ணீர் தேங்காது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ரூ.60 கோடி மதிப்பில் திருமங்கலத்தில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த கட்டிடம் 2 ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதுவரை இக்கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விருதுநகர், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிகளிடம் இந்திய மருத்துவ கவுன்சில் ஆணையரிடம் அனுமதி கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here