விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக களமிறங்கிய புது நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் முல்லையாக களமிறங்கிய புது நடிகை - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக களமிறங்கிய புது நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பதாக செய்தி வெளியான நிலையில் அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடுத்தர கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என எடுத்துக் காட்டாக இருக்கிறது. இந்த சீரியலில் பல சுபகாரியங்கள் நடந்த வண்ணம் இருக்க கடந்த வாரம் கடை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலில் தனம், மூர்த்தி முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கின்றனர். தனம் கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். மூர்த்தியாக ஸ்டாலின் முத்து நடித்து வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்!

மேலும் இரண்டாவது தம்பியாக ஜீவா மீனா கதாபாத்திரத்தில் வெங்கட் மற்றும் ஹேமா நடித்து வருகின்றனர். அடுத்ததாக கதிர் முல்லை கதாபாத்திரத்தில் குமரன் மற்றும் விஜே சித்ரா நடித்தனர். ஆனால் திடீரென விஜே சித்ரா தற்கொலை கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக காவ்யா அறிவுமணி நடிக்க தொடங்கினார். தொடக்கத்தில் முல்லையாக அவரை ஏற்றுக் கொள்ளாத மக்கள் பின் படிப்படியாக அவருடைய எதார்த்தமான நடிப்பால் முல்லையாக கால்தடம் பதித்தார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் குடும்பத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் இருந்து காவ்யா அறிவுமணி விலக இருப்பதாக யூடுப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்து இருந்தார். இந்நிலையில் முல்லையாக புது நடிகை களமிறங்கி இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனால் அது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here