இந்தியாவில் ‘சர்வதேச விமான பயணிகளுக்கு’ கடும் கட்டுப்பாடுகள் – ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!

0
இந்தியாவில் 'சர்வதேச விமான பயணிகளுக்கு' கடும் கட்டுப்பாடுகள் - ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!
இந்தியாவில் 'சர்வதேச விமான பயணிகளுக்கு' கடும் கட்டுப்பாடுகள் - ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!
இந்தியாவில் ‘சர்வதேச விமான பயணிகளுக்கு’ கடும் கட்டுப்பாடுகள் – ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!

இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அல்லது தென் ஆப்பிரிக்காவுக்கு பயணிக்கும் பயணிகள் மருத்துவ பரிசோதனை மற்றும் கூடுதல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்:

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ நவ.24ம் தேதி அன்று கண்டறியப்பட்டது. மேலும் இது மிகவும் வேகமாக பரவக் கூடியதாக உள்ளது. இந்த புதிய வகை வைரஸ் 30+ மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

PAN Card இல் ஆன்லைன் மூலம் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் தற்போது கர்நாடகா மாநிலத்தில் இருவருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விமான நிலையங்களில் பயணிகள் அனைவரும் கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று உத்தரவிட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாட்டில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் நடத்தப்படும் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால் தான் விமான நிலையத்தில் இருந்து வெளிவர முடியும். மேலும் பயணிகள் பயணத்துக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்.

PF கணக்கில் இருந்து முன்கூட்டியே பணத்தை பெறும் விதிகள் – EPFO பயனர்கள் கவனத்திற்கு!

கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்த பிறகு விமான நிலையத்தில் இருந்து பயணிகள் புறப்படலாம். ஆனால் 7 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் 8வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். அதை தொடர்ந்து 7 நாட்கள் சுய கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்காளம், டாமன் டையூ, குஜராத்தில் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here