கொரோனா தடுப்பூசி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசு வெளியீடு!!
நாட்டில் கொரோனா தடுப்பூசி தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வர உள்ள நிலையில், அதற்கான பல முக்கிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் விதிமுறைகள்:
நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பை எதிர்க்க நமக்கு தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழி. நாட்டில் இதுவரை 23 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூன் 21ம் தேதி முதல் முற்றிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
மேலும், ஜூன் 21ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி குறித்து புதிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மாநில அரசுகள் இதுவரை தடுப்பூசி கொள்முதலுக்கு 25% பணம் செலவு செய்ய தேவையில்லை. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்குமான கொரோனா தடுப்பூசி செலவையும் ஏற்கிறது.
TN Job “FB
Group” Join Now
மேலும், மக்கள் தொகை எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு நிலவரத்தை அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று புதிய வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றும், தனியார் மருத்துவமனைகள் சரியான விலையில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
I’m completed m.sc mathematics
My name is sivaranjani .