அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் விரைவில் அமல்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் விரைவில் அமல்!

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கூடுதல் இலவச 5 கிலோ உணவு தானியங்கள் ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் உணவு தானியங்களுடன் கூடுதலாக பெறலாம். இந்நிலையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை தற்போது உள்ள ரேஷன் கார்டு விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

புதிய விதிமுறைகள்:

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ள ரேஷன் கார்டு, பொருட்களை வாங்க மட்டும் அல்லாது, இன்றைய காலகட்டங்களில் சிலிண்டர் வாங்கவும், அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது. மேலும் குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேஷன் கார்டு 5 வகைகளில் உள்ளது. வேலை நிமித்தம் புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் வேதனையைக் குறைக்க, அரசாங்கம் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை முன்னரே அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் எவரும் நாட்டின் எந்த மாநிலத்தில் இருந்தும் இலவச ரேஷன் பெறலாம். கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மீண்டும் ஏழை குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை 2021 ஏப்ரல் மாதம் அறிவித்தது.

TCS நிறுவன ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இந்த ஆண்டில் மீண்டும் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!

இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை (அரிசி அல்லது கோதுமை) மே மற்றும் ஜூன் மாதங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் 80 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை செப்டம்பர் 2022 வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. உத்தரப் பிரதேசத்திலும், அன்று அடுத்த நாள், இதே போன்ற மாநில அரசு திட்டத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது. மேலும் ரேஷன் கார்டு விதிகளில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை சில மாற்றங்களைச் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து விவாதிக்க உணவு மற்றும் பொது விநியோகத் துறை பல்வேறு மாநிலங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளன. இந்த கூட்டத்திற்கு பிறகு தகுதிக்கான புதிய தரநிலைகள் அமைக்கப்படும். தற்போதைய தகவலின்படி, 80 கோடிக்கும் அதிகமானோர் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் (NFSA) பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், சிலர் பொருளாதார நிலையில் வளம் உள்ளவர்களாக உள்ளனர், அவர்களும் இலவச ரேஷன் திட்டத்தில் பயன் அடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் மிகவும் வெளிப்படையானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!