கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசு வெளியீடு!!

0
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியீடு!!
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியீடு!!
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசு வெளியீடு!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வரும் தடுப்பூசிகள் பக்க விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

இந்தியாவில் கொரோனா அவசரகால உபயோகத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் முதலாவது முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாவதாக 60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கும் போடப்பட்டது. தற்போது இந்தியாவில் ஜூன் மாதத்துக்குளாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பலருக்கு சில பக்க விளைவுகள் ஏற்பட்டது. அதாவது உடல்சோர்வு, நெஞ்சுவலி, காலில் வீக்கம், அடிவயிற்றில் வலி, நரம்புத்தளர்ச்சி, தலைவலி, ஊசி போட்ட இடத்தில் ரத்தம் உறைதல், காய்ச்சல், ஒவ்வாமை, மூச்சுத்திணறல் போன்ற சாதாரண விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் 700 பேருக்கு இவ்விதமான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர மறுக்கின்றனர்.

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

முன்னதாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் மக்கள் அனைவரும் முன் வந்து தயக்கமில்லாமல் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்க உள்ளது. இதற்காக தடுப்பூசி குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படவுள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here