மீனவர்களுக்காக டீசல் மானியம் வழங்கல் – புதுவை அரசு அறிவிப்பு!

0
மீனவர்களுக்காக டீசல் மானியம் வழங்கல் - புதுவை அரசு அறிவிப்பு!
மீனவர்களுக்காக டீசல் மானியம் வழங்கல் - புதுவை அரசு அறிவிப்பு!
மீனவர்களுக்காக டீசல் மானியம் வழங்கல் – புதுவை அரசு அறிவிப்பு!

புதுவையில் கடந்த 22ம் தேதி முதல்வர் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் முக்கிய நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பட்ஜெட் தாக்கல் தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மானியக் கோரிக்கை:

புதுச்சேரியில் பா.ஜ.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் தற்போது ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மத்திய அரசிடம் நிதிக்கு ஒப்புதல் பெற்ற பின்னரே பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 – 2023 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த 22ம் தேதி செய்யப்பட்டது. அதில் புதுவைக்கு ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 10,696 கோடிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் பட்ஜெட் தாக்கலில் இடம்பெற்றுள்ளது.

அதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 21 வயது முதல் 57 வயது வரையுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பட்ஜெட் மற்றும் கவர்னர் உரை மீதான விவாதமும், மானிய கோரிக்கை விவாதமும் நடைபெற்று வருகிறது.

இந்திய IT நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை? குறைய போகும் போனஸ், புதிய பணியமர்த்தல்!

அதில் மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் குறித்த விவாதத்தின் போது பாஸ்கர் எம்.எல்.ஏ அவர்கள் மீனவர்களுக்கு டீசல் மானியம் மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கமாக ஆழ்கடலில் இயந்திர விசைப்படகில் மீன் பிடிக்கும் மீனவர்கள், டீசல் வாங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மீனவர்களுக்கு டீசல் மானியம் கிடைக்கவில்லை. அதனால் விசைப்படகு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து டீசல் மானியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் மீனவர்களுக்கு டீசல் மானியம் மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!