விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வனிதாவின் புதிய அவதாரம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வனிதாவின் புதிய அவதாரம் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வனிதாவின் புதிய அவதாரம் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வனிதாவின் புதிய அவதாரம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வந்தார். தற்போது ஃபேஷன் டிசைனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில், பேஷன் ஷோவில் வனிதா நடந்து வரும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வனிதாவின் புதிய அவதாரம்:

விஜய் நடிப்பில் உருவான சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் வனிதா. வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது பங்கை கொடுத்து வந்த வனிதா மூன்று முறை திருமணம் செய்து மூன்று கணவரையும் விட்டு விலகி தான் இருக்கிறார். இதற்கு பிறகு தான் வனிதாவிற்கு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை சம்பாரித்தார். தற்போதும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தலத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா மகனுடன் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் போட்டியார்களுடன் சண்டை போட்டபடி இருந்ததால் வனிதாவுக்கு வத்திக்குச்சி வனிதா என்கிற பெயர் வந்தது. பிக் பாஸ் வீட்டில் மிகப்பெரிய கலவரம் செய்து வீட்டில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளும் வந்து குவிந்தன. தற்போது வனிதா அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக்கப் டிராப் ஆகிய திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

ExamsDaily Mobile App Download

திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை திறந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தற்போது அதற்கும் மேலாக ஒரு படி சென்று ஃபேஷன் டிசைனராக அவதாரம் எடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடத்திய பேஷன் ஷோவில் சிகை அலங்காரம் செய்த பெண்ணுடன் வனிதாவும் நடந்து வரும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!