அஞ்சலகங்களில் புதிய கட்டணங்கள் அறிமுகம் – ஆகஸ்ட் 1 முதல் அமல்!

0
அஞ்சலகங்களில் புதிய கட்டணங்கள் அறிமுகம் - ஆகஸ்ட் 1 முதல் அமல்!
அஞ்சலகங்களில் புதிய கட்டணங்கள் அறிமுகம் - ஆகஸ்ட் 1 முதல் அமல்!
அஞ்சலகங்களில் புதிய கட்டணங்கள் அறிமுகம் – ஆகஸ்ட் 1 முதல் அமல்!

வங்கிகளைப் போலவே அஞ்சலகங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு கட்டணங்கள் சற்று குறைவாகவே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருத்தியமைக்கப்பட்டதான சில சேவை கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.

கட்டணம் அறிமுகம்:

தற்போதுள்ள சூழலில் வங்கிகளில் வழங்கப்பட்டு வரும் சில சேவைகளை போன்றே, அஞ்சலகங்களில் மிக குறைந்த அளவு வட்டி, சேமிப்பு கணக்கு உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் வங்கிகளில் பண பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணங்களை விட அஞ்சலக சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைவு தான். அந்த வரிசையில் அஞ்சலகங்கள், தனது வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான கணக்கு, டிஜிட்டல் மற்றும் அடிப்படையான கணக்கு உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – பணிகள் தொடக்கம்!

இந்த கணக்குகளுக்கு ஜீரோ இருப்புத் தொகை போதுமானதாகும். இந்நிலையில் அஞ்சலக கணக்குகளில் வழங்கப்படும் சில கணக்குகளில் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அந்த வகையில் கேஸ் டெபாசிட் மற்றும் வித்டிராவல் கட்டணத்தை 20 ரூபாயாகவும் அதனுடன் சேர்த்து GST கட்டணமும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மொபைல் பில் பேமெண்ட் கட்டணங்களுக்கு எவ்வித கட்டணமும் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் மொபைல் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் செலுத்தும் பேமண்ட் கட்டணங்களுக்கு மட்டும் ரூ.20 உடன் GST வசூலிக்கப்படுகிறது. தவிர டோர்ஸ்டெப் பேங்கிங் சார்ஜஸ் போஸ்ட்பேமெண்ட் வங்கி சேவைக்கு ரூ.20 கட்டணமாகவும், PPF, RD, சுகன்யா சம்ரிதி சேவை கட்டணங்கள், பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு, தொடர் வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதிக்கு எதிரான கடன் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணமாக ரூ.20 மற்றும் GST வசூலிக்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் IPPB மூலம் பண்ட் டிரான்ஸ்பர் கட்டண பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், அந்த சேவைகளுக்கு ரூ.20 உடன் GST கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் மற்ற வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்த விரும்பினால் ரூ.20 ரூபாய் உடன் GST கட்டணமும் கூடுதலாக DSB யும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர QR code மூலம் சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், UPI சேவைகளுக்கும் ரூ.20 கட்டணத்துடன் GST வசூலிக்கப்பட உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here