WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – HD புகைப்படங்களை சேர் செய்யலாம்!

0
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - HD புகைப்படங்களை சேர் செய்யலாம்!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - HD புகைப்படங்களை சேர் செய்யலாம்!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – HD புகைப்படங்களை சேர் செய்யலாம்!

சிறந்த தகவல் தொடர்பு சாதனமான WhatsApp செயலி தனது பீட்டா பயனர்களுக்கான புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வகை அப்டேட்கள் மூலம் வாட்ஸ் அப் பயனர்கள் இனி HD புகைப்படங்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

புதிய அப்டேட்:

உலகின் முன்னணி தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ் அப் அதிகபட்ச வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட காலம் துவங்கி இதை விட சிறப்பான அம்சங்களை கொண்ட பல செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், வாட்ஸ் அப் செயலிக்கான தனித்தன்மை வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை. அதாவது ஒவ்வொரு முறையும் வாட்ஸ் அப் செயலி தனது அப்டேட் மூலம் புதிய அறிமுகத்தை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

முதல்வர் முக ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் – குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!

அந்த வகையில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள புதிய அப்டேட் வாட்ஸ் அப் பயனர்கள் HD புகைப்படங்களை பரிமாறிக்கொள்ள அனுமதிக்கிறது. இவ்வகை ‘புகைப்பட பதிவேற்றம்’ ஆட்டோ, சிறந்த தரம் மற்றும் டேட்டா சேவர் ஆகிய மூன்று தேர்வுகளை பயனர்களுக்கு வழங்குகிறது. WABetaInfo தகவலின் படி, பெஸ்ட் குவாலிட்டி என்ற ஆப்சனின் கீழ் அனுப்பப்படும் படங்கள் பெரியவையாக இருக்கும் எனவும் அந்த புகைப்படங்களை அனுப்புவதற்கு அதிக நேரம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் வாட்ஸ் அப் பயனர்கள் HD புகைப்படங்களை அனுப்ப பெஸ்ட் குவாலிட்டி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ் அப் செயலி, நீங்கள் அனுப்பும் புகைப்படங்களை சுருக்கி விடும். அதாவது வாட்ஸ் அப்அறிமுகப்படுத்தும் புதிய வழிமுறையானது, புகைப்படங்களின் ஒரிஜினல் குவாலிட்டியை 80%மாக சுருக்குகிறது. மேலும் புகைப்படத்தின் அளவு 2048×2048 ஐ விட அதிகமாக இருந்தால் மட்டுமே அவற்றை மறு அளவிடுகிறது. வாட்ஸ் அப்பின் பழைய அம்சத்தின் படி பார்க்கையில், புகைப்படங்கள் அதன் அசல் தரத்தில் 70% மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த இந்த அம்சம் பீட்டா பதிப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here